பொது சேவையில், ரகுமான்


பொது சேவையில், ரகுமான்
x
தினத்தந்தி 4 Feb 2022 11:02 AM IST (Updated: 4 Feb 2022 11:02 AM IST)
t-max-icont-min-icon

ரசிகர் மன்றத்தினர் சமூக சேவையில் ஈடுபட்டதை தொடர்ந்து ரகுமானுக்கும், பொது சேவையில் ஆர்வம் வந்திருப்பதாக அவருடைய நண்பர்கள் கூறுகிறார்கள்.

மிகச் சிறப்பாக நடனம் ஆடும் நடிகர்களில் ரகுமானும் ஒருவர். கேரளாவைச் சேர்ந்த இவர், ஆரம்ப காலத்தில் மலையாளப் படங்களில் நடித்தார். அங்கிருந்து தமிழ் பட உலகுக்கு வந்த இவர், எஸ்.ஏ.சந்திரசேகரனின் ‘நிலவே மலரே’, கே.பாலசந்தரின் ‘புது புது அர்த்தங்கள்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் இவருடைய மகளுக்கு திருமணம் நடந்தது. இதையொட்டி ரகுமான் ரசிகர் மன்றத்தினர் சமூக சேவையில் ஈடுபட்டார்கள். கேரளாவின் பல்வேறு இடங்களில், சாலையோரம் வசிக்கும் பாமர மக்களுக்கு உணவு வழங்கினார்கள்.

மருத்துவ வசதியில்லாத கிராமப்புறங்களில், ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கிறார்கள். இதைத் தொடர்ந்து ரகுமானுக்கும், பொது சேவையில் ஆர்வம் வந்திருப்பதாக அவருடைய நண்பர்கள் கூறுகிறார்கள்.

Next Story