சசிகுமார் படத்தின் தலைப்புக்கு சிக்கல்
சசிகுமார் படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
சசிகுமார் காமன்மேன் என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்ய சிவா இயக்குகிறார். படத்தில் சசிகுமார் முதல் தோற்றம் மற்றும் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் காமன்மேன் தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது. அறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் 2018-ம் வருடமே ‘காமன்மேன்’ தலைப்பை பிலிம் சேம்பரில் பதிவு செய்துள்ளதாகவும், அது தொடர்பான அனைத்து ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும், எனவே காமன்மேன் தலைப்பை சசிகுமார் படத்துக்கு பயன்படுத்துக்கூடாது என்றும் தெரிவித்தார். ஆனாலும் காமன்மேன் தலைப்பை பயன்படுத்துவதில் சசிகுமார் படக்குழுவினர் உறுதியாக இருந்தனர்.
இதையடுத்து விஜய் ஆனந்த் தரப்பில் காமன்மேன் தலைப்பு தங்களுக்கே சொந்தம் என்றும், இந்த தலைப்பில் வேறு எந்த படத்துக்கும் அனுமதி சான்று வழங்கக்கூடாது என்றும் தணிக்கை குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதை ஏற்று தணிக்கை குழு, ‘காமன்மேன்’ தலைப்பை விஜய் ஆனந்த் இயக்கும் படத்துக்கு பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சசிகுமார் படத்துக்கு காமன்மேன் தலைப்பை பயன்படுத்த சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story