ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!
நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் ஜெயம் ரவி தற்போது 'பூலோகம்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணனின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'ஜே.ஆர் 28' என்று பெயரிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'அகிலன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அகிலன் திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்கிறது. விவேக் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
#Agilan makes his entry! Happy to unveil the first look of our #JR28@actor_jayamravi@Screensceneoffl#DirKalyan@priya_Bshankar@actortanya@SamCSmusic@RVijaimurugan@Pallavi_offl@skiran_kumar@harishuthaman @janichirajani @onlynikil@CtcMediaboypic.twitter.com/rIkcvdX7wL
— Screen Scene (@Screensceneoffl) February 12, 2022
Related Tags :
Next Story