துல்கர் சல்மான் நடிக்கும் 'ஹே சினாமிகா' படத்தின் டிரைலர் வெளியானது..!
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் 'ஹே சினாமிகா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை,
'ஹே சினாமிகா' திரைப்படத்தின் மூலம் நடன பயிற்சியாளர் பிருந்தா கோபால் இயக்குனராக அறிமுகமாகிறார். நடிகர் துல்கர் சல்மான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால், கே. பாக்கியராஜ், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஹே சினாமிகா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்திற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி திரைக்கதை மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார்.
It’s hereeee 😍!! #HeySinamikaTrailer is out now!
— Dulquer Salmaan (@dulQuer) February 16, 2022
Love gets complicated this season with @dulQuer@MsKajalAggarwal and @aditiraohydari
Directed by @BrindhaGopal1, produced by @jiostudios
In cinema halls from March 3rd.
#HeySinamikaFromMarch3#DQ33https://t.co/oWhtyCOUjj
Related Tags :
Next Story