இந்தோனேசியாவின் பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படும் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு'
இந்தோனேசியாவின் பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை 'ஒத்த செருப்பு' பெற்றுள்ளது.
சென்னை,
நடிகர் பார்த்திபன் தனியாக தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது விழாவில் ஸ்பெஷல் ஜூரி விருது பெற்றது. மேலும் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளையும் வென்றது.
இந்த நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனேசிய மொழியான 'பஹாசா' மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. பி.டி. பால்கன் என்ற நிறுவனம் இதை தயாரிக்க உள்ளது. இதன்மூலம் இந்தோனேஷியாவின் பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ஒத்த செருப்பு திரைப்படம் பெற்றுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் பார்த்திபன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியில் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் ஒத்த செருப்பு திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை நடிகர் பார்த்திபன் உருவாக்கி வருகிறார். இதை நடிகர் அமிதாப் பச்சன் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.
நண்பகல்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 17, 2022
வெண்பொங்கல்
வியாபாரம்
சூடுபுடிக்குதாம்! pic.twitter.com/uFPg4A4nPY
Related Tags :
Next Story