13 வருடங்களுக்குப்பின், பிரபுதேவா-வடிவேல் கூட்டணி
13 வருடங்களுக்குப்பின் வடிவேலுவுடன் பிரபுதேவா ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
வடிவேலுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பின் அவர், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில், வடிவேலுவுடன் பிரபுதேவாவும் நடிக்கிறார். சுராஜ் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெறுகின்றன.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அவருடைய இசையில், வடிவேல் சொந்தக் குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்தப் பாடல் காட்சிக்கு பிரபுதேவா நடனம் அமைப்பதுடன், வடிவேலுவுடன் இணைந்து ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதற்கு முன்பு பிரபுதேவாவும், வடிவேலுவும் ‘மனதை திருடிவிட்டாய்’ படத்தில் இணைந்து நடித்தார்கள். அந்தப் படம் திரைக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டன. அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படம் இதுவே.
இரண்டு பேரும் ‘காதலன்’ படத்தில் இணைந்து நடனம் ஆடிய ‘பேட்ட ரப்’ பாடல், பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது போல் இந்தப் பாடலும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story