இசையில் 2-ம் பாகம் ஏன் வரக்கூடாது? இளையராஜா புதிய அறிவிப்பு
‘ஹவ் டு நேம் இட்' என்ற இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக இளையராஜா அறிவித்து உள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-ம் ஆண்டு ‘ஹவ் டு நேம் இட்' என்ற இசை ஆல்பம் வெளியானது. 48 நிமிடங்கள் கொண்ட இந்த இசை ஆல்பம், இந்திய மேற்கத்திய இசை பாணியில் உருவாகி இருந்தது. திரைப்படங்களுக்கு என்று இல்லாமல் இளையராஜா இசையில் வந்த முதல் தனி இசை ஆல்பம் இதுவாகும். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் இந்த இசை ஆல்பம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஹவ் டு நேம் இட் இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக இளையராஜா அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும்போது, ''திரைப்படங்களில் 2-ம் பாகம், 3-ம் பாகம் என்று வெளியாகிறது. உதாரணத்திற்கு சூப்பர்மேன், சூப்பர்மேன்-2, சூப்பர்மேன்-3 எனவும், அதேபோல் பேட்மேன், பேட்மேன்-2, பேட்மேன்-3 எனவும் வெளியாகிறது. அதேபோல் ஏன் இசையில் அடுத்தடுத்த பாகங்கள் ஏன் வரக்கூடாது என்ற யோசித்தேன். அதனால் ‘ஹவ் டு நேம் இட் 2-ம் பாகம்’ சீக்கிரமே வரப்போகிறது’’ என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story