அமீரக அரசு கவுரவம்: நடிகை பிரணிதாவுக்கு கோல்டன் விசா
அமீரக அரசு நடிகை பிரணிதாவுக்கு கோல்டன் விசா வழங்கிய கவுரவப்படுத்தியது.
ஐக்கிய அரபு அமீரக அரசு உலக அளவில் சாதனையாளர்களை கவுரவிக்கும் விதமாக, கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை பெற்றவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். தமிழ் நடிகர் பார்த்திபன், இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், மலையாள நடிகர்கள் மம்முட்டி, பிருதிவிராஜ், துல்கர் சல்மான், இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தலா மற்றும் மீரா ஜாஸ்மின், திரிஷா, காஜல் அகர்வால், அமலாபால், லட்சுமிராய் உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தற்போது, நடிகை பிரணிதாவும் கோல்டன் விசா பெற்றுள்ளார். இதனை தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவர் தெரிவித்து உள்ளார். பிரணிதா தமிழில் உதயன் படம் மூலம் அறிமுகமானார். சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார்.
சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி மற்றும் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கடந்த வருடம் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்து கொண்டார்.
Related Tags :
Next Story