இளம் நடிகையுடன் காதல் ஹிருத்திக் ரோஷன் 2-வது திருமணம்?
இளம் நடிகையுடன் ஹிருத்திக் ரோஷன் காதலிப்பதாக தகவல் வெளியானது விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஹிருத்திக் ரோஷன். இவர் 2000-ல் இண்டீரியர் டிசைனர் சுஷானா கானை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹிரேகான், ஹிருதன் என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2014-ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஹிருத்திக் ரோஷனும், சுஷானா கானும் விவாகரத்து செய்து கொண்டனர். ஆனாலும் குழந்தைகள் நலனுக்காக நட்புடன் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன், இளம் இந்தி நடிகையும் பாடகியுமான சபா ஆசாத்தை காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இருவரும் மும்பை ஓட்டலில் சாப்பிட்டு விட்டு கைகோர்த்தபடி ஜோடியாக வெளியே வந்த புகைப்படம் வெளியாகி வைரலானது.
தற்போது ஹிருத்திக் ரோஷனும், சபா ஆசாத்தும் குடும்பத்தினருடன் இருக்கும் புதிய புகைப்படம், சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு உள்ளது. இந்த புகைப்படத்தில் ஹிருத்திக் ரோஷனின் தாய் பிங்கி ரோஷனும் இருக்கிறார். இதன் மூலம் ஹிருத்திக் ரோஷன், சபா ஆசாத் காதல் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
Related Tags :
Next Story