கொரோனா பின்னணி கதையில் டாப்சி


கொரோனா பின்னணி கதையில் டாப்சி
x
தினத்தந்தி 26 Feb 2022 2:05 PM IST (Updated: 26 Feb 2022 2:05 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலையும் அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் மையமாக வைத்து புதிய படம் தயாராகிறது. இந்த படத்தில் டாப்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பல கதைகளை கொண்ட ஆந்தாலஜி படமாக இதை எடுக்கின்றனர்.இந்தியில் தயாராகும் இந்த படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியிடுகின்றனர். இந்த படத்தில் டாப்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் அனுபவ் சின்ஹா தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே டாப்சி நடித்த முல்க், தப்பட் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கூறும்போது, “கொரோனா பரவல் கடந்த 2 வருடங்களாக மக்களை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது. கொரோனா காலத்தில் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் படமாக இது இருக்கும். டாப்சி சிறந்த நடிகை. அவர் இந்த படத்தில் நடிப்பது கதைக்கு வலுசேர்க்கும்” என்றார்.

ஆடுகளம் மூலம் தமிழில் அறிமுகமான டாப்சி இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை கதையில் நடிக்கிறார்.


Next Story