அசோக் செல்வன் நடித்துள்ள 'மன்மத லீலை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள 'மன்மத லீலை திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது 'மன்மத லீலை' என்று பெயரிடப்பட்டுள்ள அடல்ட் காமெடி திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். ஏற்கெனவே 'கோவா' திரைப்படத்தில் வெங்கட் பிரபு அடல்ட் காமெடியை முயற்சித்திருந்தார். வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட் நடிகைகள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மணிவண்ணன் எழுதியுள்ளார். இந்த படத்தின் கதை ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றியது என்றும் இயக்குனர் பாக்கியராஜின் 'சின்ன வீடு' திரைப்பட பாணியில் இருக்கும் என்றும் படத்தின் கதை குறித்து வெங்கட் பிரபு கூறியிருந்தார்.
மன்மத லீலை திரைப்படத்தை முதலில் ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருந்த படக்குழு அதன் பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்தது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி மன்மத லீலை திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
#ManmathaLeelai From April 1st World Wide Release in Theatres! ❤️
— Ashok Selvan (@AshokSelvan) February 26, 2022
So, Are you Ready for LeeLIE’s?
A Venkat Prabhu Quickie #VP10@Rockfortent#BlackTicketCompany
@vp_offl@SamyukthaHegde@smruthi_venkat@IRiyaSuman@Premgiamaren@that_Cameraman@UmeshJKumar@kbsriram16pic.twitter.com/3RyIghzaHk
Related Tags :
Next Story