சீனாவில் வெளியாகும் சிவகார்திகேயனின் 'கனா' திரைப்படம்..!


சீனாவில் வெளியாகும் சிவகார்திகேயனின் கனா திரைப்படம்..!
x
தினத்தந்தி 26 Feb 2022 5:43 PM IST (Updated: 26 Feb 2022 5:43 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது.

சென்னை, 

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்த திரைப்படம் 'கனா'. 'கபாலி' திரைப்படத்தின் 'நெருப்புடா' பாடல் மூலம் பிரபலமான அருண்ராஜா காமராஜ் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சிவகார்த்திகேயன் 'கனா' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தன்னுடைய சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் தற்போது 'கனா' திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வருகிற மார்ச் மாதம் 18-ந்தேதி கனா திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது.

Next Story