கங்கனாவின் ‘லாக்கப்' நிகழ்ச்சிக்கு தடை
நடிகை கங்கனா ரனாவத்தின் ’லாக்கப்’ நிகழ்ச்சிக்கு ஐதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழில் தாம்தூம் படத்திலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்திலும் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துகளை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஓ.டி.டி. தளத்தில் பிக்பாஸ் போன்று லாக்கப் என்ற நிகழ்ச்சியை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்குகிறார். இதில் பூனம் பாண்டே, ஹினாகான் உள்பட 16 பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். ஏக்தா கபூர் தயாரித்து உள்ளார். இதில் பங்கேற்கும் 16 பேரும் பேன், கடிகாரம் டி.வி எதுவும் இல்லாமல் சில மாதங்கள் லாக்கப்பில் அடைக்கப்பட்டு இருப்பது போன்று நிகழ்ச்சியை உருவாக்கி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் லாக்கப் நாங்கள் உருவாக்கிய நிகழ்ச்சியின் காப்பி. இந்த நிகழ்ச்சியின் கருவானது எங்களுக்கு மட்டுமே சொந்தம். காப்புரிமை சட்டத்தில் எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்துள்ளோம். என்று வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து லாக்கப் நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
Related Tags :
Next Story