பாலா படத்தில் நடிக்கவுள்ள சூர்யா - ஜோதிகா ஜோடி!


பாலா படத்தில் நடிக்கவுள்ள சூர்யா - ஜோதிகா ஜோடி!
x
தினத்தந்தி 2 March 2022 8:34 AM IST (Updated: 2 March 2022 8:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் சினிமாவின் முன்னணி ஜோடியாக திகழ்ந்த சூர்யா ஜோதிகா இயக்குனர் பாலா படத்தில் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் சூர்யாவின் எதர்க்கும் துணிந்தவன் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கும் நிலையில் சூர்யாவின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் தமிழ் திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும் வெற்றிகரமாக தங்கள் திரைப்பயணத்தை நடத்தி வருகிறார்கள். சூர்யாவுக்கு பாலாவின் நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. 

தற்போது பாலா இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் சூர்யா. தனது 2டி நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில் பாலாவின் இந்த கதையில் ஜோதிகாவும் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குமுன் சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து உயிரிலே கலந்தது, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல், காக்க காக்க போன்ற பல படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story