வாழ்க்கை வரலாற்று திரைப்படம்; அமிதாப் பச்சனுக்கு பாராட்டு தெரிவித்த அமீர் கான்
ஒரு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு அனைவரும் எழுந்து நின்று கைதட்டுவது இதுவே முதல் முறை என அமீர் கான் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் பார்சே.இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் ஸ்லம் சாக்காரின் நிறுவனர். சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்காக இவர் தொடங்கிய கால்பந்து அகாடமி தான் ஸ்லம் சாக்கார்.
இவர் தன் ஓய்வுக்குப் பிறகு பெற்ற ரூ.18 லட்சத்தில் சில ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது.அந்த பணத்தில் இவர் கால்பந்து அகாடமியை தொடங்கியுள்ளார்.
தற்போது இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. அதற்கு "ஜூன்ட் " என பெயரிட்டுள்ளனர். விஜய் பார்சே கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 4ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்த்த முன்னணி பாலிவுட் நடிகர் அமீர் கான் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் ,"ஒரு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு அனைவரும் எழுந்து நின்று கைதட்டுவது இதுவே முதல் முறை. என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளீர்கள். ஆனால் இந்த திரைப்படம் சிறப்பு வாய்ந்தது. மிகவும் சிறப்பாக நடித்துள்ளீர்கள்" என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story