‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக, லைகா நிறுவனம் தயாரிப்பில் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story