பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'குதிரை வால்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'குதிரை வால்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
சென்னை,
மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் சியாம் சுந்தர் இயக்கத்தில் நடிகர் கலையரசன் நடித்துள்ள திரைப்படம் 'குதிரை வால்'. இந்த திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் அஞ்சலி படீல், சவுமியா ஜகன் மூர்த்தி, ஆனந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த திரைப்படம் மார்ச் 4-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 18-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் டீசர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
மார்ச் 4ம் தேதி வெளியாகவிருந்த எங்கள் ‘குதிரைவால்’ திரைப்படம், மார்ச் 18ம் தேதி வெளியாகவிருக்கிறது. இன்று, ஒரு காட்சி அல்லது ஒரு காட்சியின் சிறுபகுதியாக செய்த டீஸரைக் காணலாம்! @officialneelam@YaazhiFilms_#KuthiraivaalfromMarch18th#KuthiraivaalTeaserhttps://t.co/LHTsDWdjFx
— pa.ranjith (@beemji) March 2, 2022
Related Tags :
Next Story