புது காருக்கு பூஜை நயன்தாராவை காண திரண்ட ரசிகர்கள்
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். இந்த காருக்கு பூஜை போடுவதற்காக சென்னை பல்லவன் சாலையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றனர்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். தற்போது இந்தி படத்திலும் ஷாருக்கான் ஜோடியாக நடிக்கிறார். விஜய்சேதுபதியுடன் நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் திரைக்கு வர தயாராக உள்ளது.
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த வருடத்தில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் இணைந்து பட தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். இந்த காருக்கு பூஜை போடுவதற்காக சென்னை பல்லவன் சாலையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றனர். அங்கு காருக்கு பூஜை போடப்பட்டது. காருக்கு பூஜை போட சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த நயன்தாராவை பார்த்ததும் ரசிகர்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வேகமாக பூஜையை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story