விமர்சிப்பவர்களுக்கு சன்னி லியோன் கொடுத்த பதிலடி..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 March 2022 10:53 PM IST (Updated: 5 March 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

சென்னை,

நடிகை சன்னி லியோன் சமீபத்தில் திரைப்பிரபலங்களை இணையத்தில் விமர்சனம் செய்பவர்களைப் பற்றிப் பேசியிருப்பது பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது. இணையத்தில் நம்மை ட்ரோல் செய்பவர்களை முதலில் படிக்கவும் கூடாது, அதைத் தடுக்கவும் கூடாது. அதைப் படிப்பதால் தவறு செய்யும் நபரை நாமே ஊக்கப்படுத்துவது போலாகும்.

அவர்கள் நம் வாழ்க்கையில் முக்கியமானவர்கள் அல்ல. நமக்குச் சமைத்துக் கொடுப்பவர்களோ, நம் குழந்தைக்கு டயபர் மாட்டி விடுபவர்களோ அல்ல. அதனால் அவர்கள் செய்வதை அப்படியே விட்டு விடுங்கள் என்று பேசியிருக்கிறார். 

இது சக நடிகைகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. சன்னி லியோன் ஒரு இணையத்தொடரைத் தயாரித்து நடித்து வருகிறார். அனாமிகா என்ற பெயரில் வரும் இந்த தொடரை விக்ரம் பட் இயக்குகிறார்.


Next Story