நடிகை மீனாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவம்..!


நடிகை மீனாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவம்..!
x
தினத்தந்தி 6 March 2022 12:29 AM GMT (Updated: 6 March 2022 12:29 AM GMT)

ஐக்கிய அரபு அமீரகம் நடிகை மீனாவுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

துபாய்,

ஐக்கிய  அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகை மீனாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. நடிகை மீனா சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதுவரை தமிழ் சினிமாவைச் சேர்ந்த திரிஷா, பார்த்திபன், அமலாபால், சிம்பு, உள்ளிட்ட பலர் அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story