தனுசுடன் நடிக்கும் செல்வராகவன்


தனுசுடன் நடிக்கும் செல்வராகவன்
x
தினத்தந்தி 7 March 2022 2:39 PM IST (Updated: 7 March 2022 2:39 PM IST)
t-max-icont-min-icon

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தில் செல்வராகவனும் நடிக்கிறார் என்பதை தெரிவித்துள்ளார், தயாரிப்பாளர் தாணு.

தமிழில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்.ஜி.கே உள்ளிட்ட படங்களை இயக்கி முன்னணி டைரக்டராக உயர்ந்த செல்வராகவன் தற்போது படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேசுடன் இணைந்து நடித்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. விஜய்யுடன் பீஸ்ட் படத்திலும் நடித்துள்ளார். மோகன் ஜி. இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த நிலையில் அடுத்து நானே வருவேன் படத்தில் தனுசுடன் இணைந்து செல்வராகவன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை செல்வராகவனே இயக்குகிறார். பட வேலைகள் தொடங்கி உள்ளன. 

படத்தின் தயாரிப்பாளர் தாணு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''இயக்கத்தில் சிகரம் தொட்ட செல்வராகவன் நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துகிறேன்’’ என்று குறிப்பிட்டு நானே வருவேன் படத்தின் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டரில் தனுசும் செல்வராகவனும் வித்தியாசமான தோற்றங்களில் உள்ளனர். இதன் மூலம் தனுசுடன் செல்வராகவன் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.


Next Story