பாலியல் புகாரில் டைரக்டர் கைது


பாலியல் புகாரில் டைரக்டர் கைது
x
தினத்தந்தி 8 March 2022 2:38 PM IST (Updated: 8 March 2022 2:38 PM IST)
t-max-icont-min-icon

பிரபல மலையாள இயக்குனர் லிஜு கிருஷ்ணா தனது டீமில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு கடந்த ஆறு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பதிவான புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தமிழில் வந்த நேரம், ரிச்சி படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி தற்போது ‘படவேட்டு’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் வருகிறார். தமிழில் அருவி படம் மூலம் பிரபலமான அதிதி பாலன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை லிஜு கிருஷ்ணா டைரக்டு செய்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் டைரக்டர் லிஜு கிருஷ்ணா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, காக்கநாட்டைச் சேர்ந்த இளம்பெண் கொச்சி போலீசில் புகார் அளித்தார். 

புகார் மனுவில்,லிஜு கிருஷ்ணா கடந்த 2020 டிசம்பர் முதல் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை, அவரது வீட்டில் வைத்தும், மேலும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது படப்பிடிப்பு அரங்குக்கு சென்று லிஜு கிருஷ்ணாவை கைது செய்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பாலியல் வழக்கில் டைரக்டர் கைதானது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story