இந்த வருடத்தில் திரைக்கு வரும் விக்ரமின் 3 படங்கள்
இந்த வருடம் விக்ரம் நடித்துள்ள கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் ஆகிய 3 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான் படம் கடந்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த வருடம் விக்ரம் நடித்துள்ள கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் ஆகிய 3 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய 2 படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்துள்ளன. கோப்ரா படத்தை மே மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
நீண்ட காலமாக முடங்கி இருந்த துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிகட்ட பணிகள் தொடங்கி உள்ளன. நடிகர்-நடிகைகள் டப்பிங் பேசி வருகிறார்கள். இந்த படமும் ஓரிரு மாதங்களில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரம் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் தோற்றத்தை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். பொன்னியின் செல்வன் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. விக்ரம் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story