பா. ரஞ்சித் தயாரித்துள்ள 'குதிரை வால்' படத்தின் டிரைலர் வெளியானது..!


பா. ரஞ்சித் தயாரித்துள்ள குதிரை வால் படத்தின் டிரைலர் வெளியானது..!
x
தினத்தந்தி 10 March 2022 6:29 PM IST (Updated: 10 March 2022 6:29 PM IST)
t-max-icont-min-icon

இயக்குனர் பா. ரஞ்சித் தயாரித்துள்ள 'குதிரை வால்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'குதிரை வால்'. இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் சியாம் சுந்தர் இயக்கியுள்ளனர்.

மேலும் குதிரை வால் திரைப்படத்தில் அஞ்சலி படீல், சவுமியா ஜகன் மூர்த்தி, ஆனந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த நிலையில் குதிரை வால் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. தூக்கத்திலிருந்து எழும்பும் கதாநாயகனின் உடலில் குதிரையின் வால் தோன்றியுள்ளது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை மையமாக கொண்டு குதிரை வால் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. குதிரை வால் திரைப்படம் வருகிற மார்ச் 18-ந்தேதி வெளியாக இருக்கிறது.

Next Story