உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது ‘ராதே ஷியாம்’


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 March 2022 4:31 AM IST (Updated: 11 March 2022 4:31 AM IST)
t-max-icont-min-icon

மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.

சென்னை,

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷியாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 

சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகிறது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் தமிழில் வெளியிடுகிறது.

‘ராதே ஷியாம்’ படம் ஜனவரி 14-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாகவும் திரையரங்குகள் 50 சதவித இருக்கைகள் காரணமாகவும் ராதே ஷியாம் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. 

இறுதியாக இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. 

Next Story