66-வது படத்தில் விஜய்க்கு வில்லனாக விவேக் ஓபராய்
விஜய் நடிக்கும் 66-வது படத்தில் வில்லனாக நடிக்க இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே நாயகியாக வருகிறார். இயக்குனர் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
தொடர்ந்து விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. விஜய்யின் 66-வது படத்துக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
இந்த படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரகாஷ்ராஜ், நானி பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில் தற்போது விஜய்க்கு வில்லனாக நடிக்க இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விவேக் ஓபராய் ஏற்கனவே விவேகம் படத்தில் அஜித்குமாருக்கு வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story