ஹிருத்திக் ரோஷனுடன் ஜோடியாக சுற்றும் நடிகை
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்துவரும் ஹிருத்திக் ரோஷன், நடிகையும் பாடகியுமான சபா ஆசாத்தை காதலித்து வருகிறார் என்பதுபோன்ற தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவியது.
இந்திய அளவில் அழகான நடிகர்களில் ஹிருத்திக் ரோஷனும் ஒருவர். ‘க்ரிஷ்', ‘தூம்', ‘ஓம் சாந்தி ஓம்', ‘கைட்ஸ்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
ஹிருத்திக் ரோஷன் கடந்த 2000-ம் ஆண்டு சுசானா என்பவரை காதலித்து மணந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2014-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து ஹிருத்திக் ரோஷன் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
இதற்கிடையில் ஹிருத்திக் ரோஷனுக்கும், நடிகையும், இசையமைப்பாளருமான சபா ஆசாத்துக்கும் காதல் என செய்திகள் வெளியானது. இருவரது தரப்பிலும் அதை மறுக்கவில்லை.
தற்போது ஹிருத்திக் ரோஷன்-சபா ஆசாத் ஆகிய இருவரும் ஜோடியாக சுற்றி திரிகிறார்கள். சமீபத்தில் தனது வீட்டில் இசை ஆல்பம் ஒன்றை சபா ஆசாத் வெளியிட்டிருக்கிறார். அதில் ஹிருத்திக் ரோஷன் மட்டும் கலந்துகொண்டுள்ளார். இதேபோல இருவரும் ஜோடியாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story