ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்கும் லாரன்ஸ்?


Image Courtesy : Twitter @ash_r_dhanush
x
Image Courtesy : Twitter @ash_r_dhanush
தினத்தந்தி 15 March 2022 1:19 AM IST (Updated: 15 March 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை.

ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தற்போது, முசாபிர் என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி உள்ளார்.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்சும், ஐஸ்வர்யாவும் திடீரென்று சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் சந்தித்த புகைப்படங்களை ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, அன்பான அண்ணன் லாரன்சை சந்தித்த பிறகு எனது மூளை இன்னும் வேகமாக செயல்படு கிறது என்று கூறியுள்ளார். 

இதன்மூலம், லாரன்ஸ் நடிக்கும் படத்தை ஐஸ்வர்யா இயக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது. 

இதுகுறித்து லாரன்ஸ் கூறுகையில், நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை பாச உணர்வில் சந்தித்தோம். தொழில் ரீதியிலான சந்திப்பாகவும் இது அமைந்தது. இந்த சந்திப்பில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. அதை ஐஸ்வர்யா ஒரு வாரத்தில் அறிவிப்பார் என்று கூறினார்.

Next Story