விதவையை மறுமணம் செய்து கொள்வேன்- இசையமைப்பாளர் டி.இமான்


விதவையை மறுமணம் செய்து கொள்வேன்- இசையமைப்பாளர் டி.இமான்
x
தினத்தந்தி 15 March 2022 2:20 PM IST (Updated: 15 March 2022 2:20 PM IST)
t-max-icont-min-icon

மறுமணம் செய்துக் கொள்வதாக இருந்தால், தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என இமான் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் தனது மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இமான் விரைவில் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதுகுறித்து டி.இமான் அளித்துள்ள பேட்டியில், “விவாகரத்து என்றாலே ஆண் சமுகத்தின் மீதுதான் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தவறுகள் யார் மீது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தனிப்பட்ட முறையில் விவாகரத்து கூடாது என்பதுதான் எனது எண்ணம். என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருப்பேன். நான் மறுமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் விரும்புகின்றனர். அடுத்து நான் திருமணம் செய்தாலும் குடும்பத்தினர் நிச்சயித்த திருமணமாகத்தான் அது இருக்கும். திருமணம் செய்து கொள்ளும் பெண் எனது குழந்தைகளுக்கும் தாயாக இருக்க வேண்டும், விதவை அல்லது விவாகரத்து செய்த பெண்ணாகவும், குழந்தை இருக்கும் பெண்ணாகவும் பாருங்கள் என்று குடும்பத்தினரிடம் கூறியுள்ளேன். குழந்தை இருக்கும் பெண்தான் எனது குழந்தைகளையும் தனது குழந்தைபோல் பார்த்துக் கொள்வார்'' என்றார்.


Next Story