ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்... 3 வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் பூனம் பாஜ்வா


ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்... 3 வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் பூனம் பாஜ்வா
x
தினத்தந்தி 18 March 2022 12:56 PM IST (Updated: 18 March 2022 12:56 PM IST)
t-max-icont-min-icon

3 வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் பூனம் பாஜ்வா ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்.

பூனம் பாஜ்வா மும்பையைச் சேர்ந்தவர். 2008-ம் ஆண்டில் வெளியான ‘சேவல்’ படத்தின் மூலமாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், அரண்மனை-2 உள்பட பல படங்களில் நடித்தார். 3 வருடங்களுக்கு முன் திரைக்கு வந்த ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்த பின், அவருக்கு புதிய படங்கள் ஒப்பந்தமாகவில்லை.

3 வருடங்களுக்குப் பிறகு அவர், ‘குருமூர்த்தி’ என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். படத்தில் அவர் ஒரு குழந்தைக்கு தாயாக வருகிறார்.

பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கே.பி.தனசேகர், ‘குருமூர்த்தி’ படத்தை இயக்கி வருகிறார். சிவசலபதி, சாய் சரவணன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். ஜனரஞ்சகமான அம்சங்களை கொண்ட கதை, இது.

கடமை தவறாதவர் என்று பெயர் வாங்கிய ஒரு போலீஸ் அதிகாரிக்கு வாழ்க்கையில் திடீர் பிரச்சினை ஏற்படுகிறது. அதை அவர் எப்படி சமாளித்தார்? என்பது கதை.

நீலகிரி, புதுச்சேரி, புத்தேரி ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

Next Story