உதவி டைரக்டர்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டும் ‘படைப்பாளன்’


உதவி டைரக்டர்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டும் ‘படைப்பாளன்’
x
தினத்தந்தி 18 March 2022 2:13 PM IST (Updated: 18 March 2022 2:13 PM IST)
t-max-icont-min-icon

சினிமாவில் நடக்கும் கதை திருட்டை மையமாக வைத்து, ‘படைப்பாளன்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.

அதில் டைரக்டர் தியான் பிரபு, ‘காக்கா முட்டை’ ரமேஷ், விக்கி மற்றும் பாடகர் வேல்முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கவுரவ தோற்றங்களில் ஜாக்குவார் தங்கம், டைரக்டர் தருண்கோபி ஆகிய இருவரும் வருகிறார்கள். படத்தை செபஸ்தியான் தயாரித்துள்ளார்.

டைரக்டர் தியான் பிரபு சொல்கிறார்:

“இது, சினிமாவில் டைரக்டராக துடிக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதை. உதவி டைரக்டர்களின் வலிகளுக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை. அப்படி ஒரு கார்பரேட் நிறுவனத்துக்கு கதை சொல்லப்போன ஒரு உதவி இயக்குனரின் சொந்த கதைதான் இந்தப் படம். அவர்களுக்கு மணப்பெண் கிடைப்பதில் இருந்து வீடு கிடைப்பது வரை அனைத்திலும் சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.

சினிமா டைரக்டர் என்றால் தவறான கருத்து மக்களிடையே பரவி இருக்கிறது. உதவி இயக்குனர்களின் வலிகளையும், வழிகளையும் இந்தப் படம் வெளிச்சம் போட்டு காட்டும். பல உண்மை சம்பவங்களை நினைவூட்டும்.”

Next Story