சீன மொழியில் ‘கனா' படம்... நடிகர் சத்யராஜ் மகிழ்ச்சி


சீன மொழியில் ‘கனா படம்... நடிகர் சத்யராஜ் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 19 March 2022 7:11 PM IST (Updated: 19 March 2022 7:11 PM IST)
t-max-icont-min-icon

சீன மொழியிலும் கனா படம் நேற்று வெளியானது. இதற்காக சத்யராஜ் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் தயாரான கனா படம் 2018-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இதில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டும் ஒரு கிராமத்து பெண் எதிர்கொள்ளும் சவால்களையும், கஷ்டங்களையும் படத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர். 

கனா படம் தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. இந்தியில் நாட் அவுட் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டனர். 

இந்த நிலையில் சீன மொழியிலும் கனா படம் நேற்று வெளியானது. இதற்காக சத்யராஜ் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ‘‘நான் நடித்த பாகுபலி படம் ஏற்கனவே சீன மொழியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்போது கனா படத்தையும் சீன மொழியில் நேற்று வெளியிட்டுள்ளனர். சீனாவில் உள்ள 10 ஆயிரத்து 700 தியேட்டர்களில் கனா படத்தை திரையிட்டு உள்ளனர். இது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கனா படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’’ என்றார்.

Next Story