வைரலாகும் புகைப்படம்... சமந்தா படத்தில் ஹாலிவுட் ‘ஸ்டண்ட்' இயக்குனர்


வைரலாகும் புகைப்படம்... சமந்தா படத்தில் ஹாலிவுட் ‘ஸ்டண்ட் இயக்குனர்
x
தினத்தந்தி 21 March 2022 5:49 AM IST (Updated: 21 March 2022 5:49 AM IST)
t-max-icont-min-icon

சமந்தாவின் சண்டை காட்சிகளை வடிவமைக்க ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென்னை ஒப்பந்தம் செய்துள்ளனர். அவருடன் இணைந்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.

தமிழ் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தாவுக்கு பேமிலிமேன் 2 வெப் தொடர் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த தொடரில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து இருந்தார். அதற்கு பாராட்டுகள் கிடைத்தன.

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க தொடங்கி உள்ளார். புராண கதையம்சம் கொண்ட சாகுந்தலம் படத்தில் சகுந்தலையாக நடித்து இருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் யசோதா படத்தில் நடித்து வருகிறார். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.

ஹரி மற்றும், ஹரிஷ் இணைந்து இயக்க, திகில் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்தில் சமந்தா அதிரடி சண்டை காட்சிகளில் நடிக்கிறார். சமந்தாவின் சண்டை காட்சிகளை வடிவமைக்க ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென்னை ஒப்பந்தம் செய்துள்ளனர். அவருடன் இணைந்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.

Next Story