சினிமா படமாகும் அப்துல் கலாம் வாழ்க்கை


சினிமா படமாகும் அப்துல் கலாம் வாழ்க்கை
x
தினத்தந்தி 24 March 2022 7:23 PM IST (Updated: 24 March 2022 7:23 PM IST)
t-max-icont-min-icon

மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வாழ்க்கையை சினிமா படமாக எடுப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

இந்த படத்துக்கு ‘விக்ஞானியன்’ என்று பெயர் வைத்துள்ளனர். பிரபல மலையாள டைரக்டர் ஶ்ரீகுமார் இயக்குகிறார். இதுகுறித்து ஶ்ரீகுமார் கூறும்போது, ‘’அப்துல்கலாம் வாழ்க்கையை சினிமா படமாக எடுப்பதற்கான திரைக்கதையை எழுதி முடித்து விட்டோம். அப்துல் கலாம் நம்மை தொழில்நுட்பத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றார். பொக்ரான் சோதனையில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது. கலாம் எப்படி வலுவான இந்தியாவை உருவாக்கினார் என்பதையும், அறிவியலின் முன்னேற்றத்தில் அவருக்குள்ள பங்கையும் படத்தில் வெளிப்படுத்த இருக்கிறோம்’’ என்றார். இந்த படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடிக்க முன்னணி தமிழ் நடிகர்கள் 3 பேரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்த படம் தயாராக உள்ளது.

Next Story