ஆன்மிகத்துக்கு மாறிய இளம் நடிகை
நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டதாக, பிரபல நடிகை அனகா போஸ்லே அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல இந்தி இளம் நடிகை அனகா போஸ்லே. இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு ஆன்மிகத்தில் ஈடுபடப் போவதாக அனகா தற்போது அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான், சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் இருந்து நிரந்தரமாக விலகுகிறேன். மத நம்பிக்கை அடிப்படையில் ஆன்மிக வழியை பின்பற்ற இருப்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். ரசிகர்கள் அனைவரும் என் மீது காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி. எனது ஆன்மிக முடிவை மதித்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆன்மிகத்தில் ஈடுபட மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது முடிவுக்காக பலர் கவலையை பகிர்ந்தார்கள். அனைவரின் அன்புக்கும் நன்றி’’ என்று கூறியுள்ளார். அனகாவின் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story