கடைசி காலம் வரை சினிமாவில் நடிப்பேன் - நடிகை ஸ்ரேயா
கடைசி காலம் வரை சினிமாவில் நடிப்பேன் என்று நடிகை ஸ்ரேயா பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். சினிமா வாழ்க்கை குறித்து ஸ்ரேயா அளித்துள்ள பேட்டியில், “எனக்கு நடிப்பு என்றால் உயிர். சினிமாவிற்கு வந்த புதிதில் அனுபவம் இல்லாததால் தடுமாற்றம் இருந்தது. இப்போது அப்படி இல்லை. சினிமா வாழ்க்கை சந்தோஷத்தை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன். வாழ்க்கையில் கடைசி காலம்வரை சினிமாவில் நடித்துக் கொண்டே இருப்பேன். எனக்கு கேமரா என்றால் இஷ்டம். புதிய புதிய கதைகளில் நடிக்க இஷ்டம். அடுத்த 10 ஆண்டுகளில் என்ன செய்வேனோ எனக்கு தெரியாது.
ஆனால் கேமராவிற்கு முன்னாலோ, பின்னாலோ, பக்கத்திலோ இருப்பேன். தற்போதைய கதைகளில் மாற்றம் வந்துள்ளது. இயக்குனர்களின் ஆலோசனைகளில் மாற்றம் உள்ளது. பெண் கதாபாத்திரங்களை இப்போது இன்னும் பலமாக உருவாக்கி வருகிறார்கள். இந்த விஷயத்தில் ஓ.டி.டிக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த தலைமுறை கதாநாயகிகள் அதிர்ஷ்டசாலிகள்'' என்றார்.
Related Tags :
Next Story