ரஜினியின் புதிய படத்தில் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்.?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 March 2022 10:05 PM IST (Updated: 29 March 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

"தலைவர் 169" ஹேஷ்டேக் திடீரென டிரெண்டாகி உள்ளது

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் 169 ஆவது படத்தை டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகி மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க இருப்பவர்கள் யார் என்பதை தெரிய ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்துக்கொண்டுள்ளனர். முன்னதாக ரஜினிகாந்தின் மகளாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவியது. ஆனால் இதுகுறித்து இயக்குனர் நெல்சர் எதுவும் தெரிவிக்கவில்லை. 

இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்துக்கு ஜோடியாக எந்திரன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், பீஸ்ட் படம் வெளிவந்ததற்கு பிறகு இயக்குனர் நெல்சன், தலைவர் 169 படம் குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Next Story