விக்ரம் பிரபு நடிக்கும் 'டாணாக்காரன்' படத்தின் டிரைலர் வெளியானது..!
நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 'டாணாக்காரன்' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் விக்ரம் பிரபு தற்போது 'டாணாக்காரன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சலி நாயர், அன்பரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
டாணாக்காரன் திரைப்படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
டாணாக்காரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 8-ம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
Here is the #TaanakkaranTrailer 🧡
— Vikram Prabhu (@iamVikramPrabhu) March 31, 2022
Proud of my entire team👍😊https://t.co/OBnxy48Sh6@ianjalinair@GhibranOfficial@philoedit@madheshmanickam@directortamil77@prabhu_sr@rthanga@Potential_st#டாணாக்காரன்#TaanakkaranFromApril8th
Related Tags :
Next Story