விஜய் படத்துடன் போட்டியா? கன்னட நடிகர் யாஷ் பதில்


விஜய் படத்துடன் போட்டியா? கன்னட நடிகர் யாஷ் பதில்
x
தினத்தந்தி 3 April 2022 1:53 PM IST (Updated: 3 April 2022 1:53 PM IST)
t-max-icont-min-icon

பீஸ்ட் மற்றும் கே.ஜி.எப்.-2 படங்கள் ரிலீசானால் அதை மோதலாக பார்க்க வேண்டாம் என்று கன்னட நடிகர் யாஷ் கூறினார்.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வருகிற 13-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கு மறுநாளே, கன்னட நடிகர் யாஷ் நடித்த ‘கே.ஜி.எப்.-2’ படம் வெளியாகிறது. இந்த 2 படங்களுமே நட்சத்திர நடிகர்களின் படங்கள் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் யாஷிடம், ‘பீஸ்ட்’ படமும், ‘கே.ஜி.எப்.-2’ படமும் அடுத்தடுத்து வெளியாகின்றன. இந்த பட மோதலை எப்படி பார்க்கிறீர்கள்?, என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு யாஷ் கூறியதாவது:-

‘‘2 படங்கள் ‘ரிலீஸ்’ ஆனால் அதை மோதலாக பார்க்க வேண்டாம். ஏனெனில் இது தேர்தல் அல்ல. இது சினிமா. எனவே 2 படங்களும் வரலாம். 2 படங்களையும் பார்க்கலாம். விஜய் சினிமாவுக்காக நிறைய செய்து இருக்கிறார். அவர் எனக்கு சீனியர். விஜய் மீது எனக்கு அதிகம் மரியாதை இருக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தை நிச்சயம் நான் பார்ப்பேன். அதேபோல விஜய் ரசிகர்கள் ‘கே.ஜி.எப்.-2’ படத்தை நிச்சயம் பார்பார்கள்’’.

இவ்வாறு யாஷ் கூறினார்.


Next Story