ஆங்கில படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு விருது


ஆங்கில படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு விருது
x
தினத்தந்தி 4 April 2022 6:59 PM IST (Updated: 4 April 2022 6:59 PM IST)
t-max-icont-min-icon

ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இளையராஜவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா எ பியூட்டிபுல் பிரேக்கப் என்ற ஆங்கில படத்துக்கு இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தை பிரபல கன்னட பட டைரக்டர் அஜித் வாசன் உஜ்ஜினா இயக்கியுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த பட நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜாவுக்கு அவரது இசையில் 1422-வது படமாக இது தயாராகி உள்ளது. இந்தப் படத்தில், நாயகனாக கிரிஷ் நாயகியாக மாட்டில்டா ஆகியோர் நடித்துள்ளனர். லண்டனில் இருந்து ஒரு காதல் ஜோடி இந்தியா வருகிறது. இங்கு ஒரு வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்து விட்டு பிரிந்து விட நினைக்கின்றனர். அந்த வீட்டில் பேய் இருக்கிறது. அதன்பிறகு, அவர்கள் முடிவில் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பது கதை. இரு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து தயாராகி உள்ளது. 

இந்தப் படம் நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த படத்தின் பின்னனி இசைக்காக இளையராஜாவுக்கு சிறந்த இசைக்கான விருது கிடைத்துள்ளது.


Next Story