கதைக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் - நடிகை ரேஷ்மா
நடிப்பது என்று வந்துவிட்டால் கதைக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று நடிகை ரேஷ்மா கூறினார்.
விமல் நடிப்பில் ‘விலங்கு' என்ற வெப் தொடர் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வீட்டுக்கு வரும் கணவரின் நண்பர்களை தனது கவர்ச்சியால் கிறங்கடித்து காதல் வலையில் வீழ்த்துவது, பின்னர் அதை வைத்து அவர்களிடமிருந்து பணம் பறிப்பது என சவாலான கதாபாத்திரத்தில் நடித்தார்.
ரேஷ்மா தற்போது டி.வி. தொடர்களில் கவர்ச்சியான வில்லி வேடத்தில் நடித்து வருகிறார்.
‘விலங்கு' படத்தில் சவாலான கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து ரேஷ்மா கூறியதாவது:-
"டி.வி. தொடர்களில் நான் மிரட்டல் வில்லியாக நடித்தாலும், உண்மையிலேயே நான் ஒரு ‘காமெடி பீஸ்' தான். நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கத்தான் எனக்கு ஆசை. ஆனால், இயக்குனர்கள் எனக்கு வில்லத்தனமான வேடங்களையே தருகிறார்கள். நடிப்பது என்று வந்துவிட்டால் கதைக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். அதில் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். நான் நடிகை. எனது வேலையை குறைவில்லாமல் செய்து முடிப்பேன்".
இவ்வாறு நடிகை ரேஷ்மா கூறினார்.
Related Tags :
Next Story