வில்லன், நகைச்சுவை நடிகர் ஆனது எப்படி? ரவிமரியா


வில்லன், நகைச்சுவை நடிகர் ஆனது எப்படி? ரவிமரியா
x
தினத்தந்தி 10 April 2022 2:48 PM IST (Updated: 10 April 2022 2:48 PM IST)
t-max-icont-min-icon

வெயில்’ படத்தில் வில்லனாக அறிமுகமான ரவிமரியா, டைரக்டர் எழில் மூலமாக காமெடி வில்லனாகியுள்ளார்.

‘‘இதுவரை வில்லனாக நடித்து காமெடி செய்து வந்த எனக்கு ஒரு காமெடியனாகவே நடித்து ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. அது இப்போது ‘இடியட்’ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது’’ என்கிறார் ரவிமரியா.

‘‘மக்களோடு மக்களாக நானும் படம் பார்த்தேன். படத்தில் நான் நடித்திருக்கும் நகைச்சுவை காட்சிகளில் ரசிகர்கள் கைதட்டி சிரித்தபோது அழுதுவிட்டேன். இப்போது நான் எங்கு சென்றாலும் காமெடி கேரக்டர் பண்ணுங்க என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.

நகைச்சுவை நடிகராக வரக்கூடிய அத்தனை தகுதிகளும் எனக்கு இருப்பதாக சொல்லித்தான் என்னை டைரக்டர் எழில் காமெடி வில்லன் ஆக்கினார். இன்று அவர் வாக்கு பலித்து விட்டது’’ என்று கூறுகிறார் ரவிமரியா.


Next Story