தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
சென்னை,
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். புவனா சுந்தர் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தனுசுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கு முன்பு செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது 'நானே வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
And it’s a wrap #Naanevaruven HE IS COMING 🏹 pic.twitter.com/AvfRqO0SG8
— Dhanush (@dhanushkraja) April 11, 2022
Related Tags :
Next Story