ஹன்சிகா சொல்லும் கதை தேர்வு முறை
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ஹன்சிகா, தற்போது வெப் தொடரிலும் நடிக்கிறார். இந்நிலையில், சினிமா அனுபவங்கள் குறித்து ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில்,
“கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் நான் எச்சரிக்கையாக இருக்கிறேன். என்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடம், ஒரு நடிகையாக இருந்து கதைகளை கேட்பது இல்லை. ஒரு பார்வையாளராக இருந்தே கதை கேட்கிறேன். கதை என் மனதுக்கு பிடிக்கவில்லை என்று தோன்றினால் அந்த படத்தில் நடிக்க மாட்டேன்.
புதுமையான வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுவேன். ரசிகர்களுக்கு வித்தியாசமான கதைகளை கொடுக்க வேண்டும். தென்னிந்திய திரையுலகில் ரசிகர்கள் எனக்கு நல்ல வரவேற்பு அளிக்கின்றனர். எனக்கு பிடித்த கதைகளில் நடிக்கவும் வாய்ப்புகள் அமைந்தன. தென்னிந்திய திரையுலகில் நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் என்னை தேடி வருகின்றன. அதே நேரம், இந்தி திரையுலகை விட்டு விலகவில்லை. எந்த மொழியில் நல்ல கதைகள் அமைந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன்’’ என்றார்.
Related Tags :
Next Story