நானி, நஸ்ரியா நடிக்கும் 'அடடே சுந்தரா' படத்தின் டீசர் வெளியீடு..!
நானி, நஸ்ரியா நடிக்கும் 'அடடே சுந்தரா' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
நடிகை நஸ்ரியா, 8 வருடங்களுக்கு பிறகு, தற்போது மீண்டும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு 'அடடே சுந்தரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நானி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
நானி ஏற்கனவே தமிழில் வெப்பம், நான் ஈ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகராகவும் இருக்கிறார். அடடே சுந்தரா திரைப்படத்தை இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இருவேறு மதங்களைச் சேர்ந்த நானியும் நஸ்ரியாவும் காதலிப்பது போன்று படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tamil teaser #AdadeSundara ❤️https://t.co/XiP38Dt4PKhttps://t.co/DWPcDT2DNX
— Nani (@NameisNani) April 20, 2022
Related Tags :
Next Story