பாலிவுட் ஹீரோவுக்காக படுக்கைக்கு அழைத்தனர் - நடிகை பேட்டி
பட வாய்ப்புக்காக கதாநாயகன் படுக்கைக்கு அழைத்ததாக, பிரபல இந்தி நடிகை இஷா கோபிகர் மீடூ புகார் தெரிவித்து உள்ளார்.
இவர் தமிழில் காதல் கவிதை, என் சுவாசக்காற்றே, நெஞ்சினிலே, நரசிம்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.
மும்பையில் இஷா கோபிகர் அளித்துள்ள பேட்டியில், ``என்னை ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். அந்த படத்தின் கதாநாயகன் தனியாக வரும்படி என்னை அழைத்தார். படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுக்கு உங்களை பிடித்துள்ளது. உதவியாளர்கள் யாரும் இல்லாமல் தனியாக சென்று அவரை சந்தியுங்கள் என்றார். எனக்கு நடிகரின் நோக்கம் புரிந்தது. எனது அழகு திறமையை வைத்துக் கொண்டுதான் இந்த நிலைக்கு வந்தேன்.
அதையெல்லாம் ஒரு படத்திற்காக அடகு வைத்து விட்டு, கீழ்த்தரமாக செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று முகத்தில் அறைந்த மாதிரி சொல்லிவிட்டு வந்து விட்டேன். இதனால் அந்த தயாரிப்பாளர் அவர் ஒப்பந்தம் செய்த படத்திலிருந்து என்னை நீக்கியது மட்டுமின்றி, நிறைய பட வாய்ப்புகள் எனக்கு கிடைக்காமல் தடுத்தார். சினிமாவில் எனது வளர்ச்சியை சீர்குலைத்து விட்டார்'’ என்றார். இந்நிலையில், இஷா கோபிகர் புகார் பரபரப்பாகி உள்ளது.
Related Tags :
Next Story