நடித்த காட்சி படத்தில் இல்லை... ரூ.1½ கோடி வாங்கிய காஜல் அகர்வால்
சிரஞ்சீவி நடிப்பில் ‘ஆச்சார்யா’ என்ற தெலுங்கு படத்தில் காஜல் அகர்வால் நடித்த அனைத்து காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி நடிப்பில் அதிக பொருட்செலவில் தயாராகி உள்ள தெலுங்கு படம் ‘ஆச்சார்யா’. கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். இதில் சிரஞ்சீவி மகன் ராம் சரணும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பூஜா ஹெக்டே, சோனு சூட், கிஷோர் ஆகியோரும் உள்ளனர். இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருந்தார். ஆரம்பத்தில் திரிஷாவை ஒப்பந்தம் செய்து அவர் விலகியதால் காஜல் அகர்வாலை தேர்வு செய்தனர். காஜல் அகர்வால் பல நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி ஆச்சார்யா படத்தில் நடித்து கொடுத்தார்.
இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் நடித்த அனைத்து காட்சிகளையும் படத்தில் இருந்து நீக்கி விட்டனர். படமாக்கிய காட்சிகளை பார்த்தபோது முன்னணி நடிகையான காஜல் அகர்வாலை சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது சரியல்ல என்று தோன்றியதால் அவர் நடித்த காட்சிகள் அனைத்தையும் நீக்கி விட்டதாக தெரிவித்தனர்.
இந்த படத்தில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு ரூ.1.50 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாகவும், படத்தில் அவரது காட்சிகள் இல்லாமல் இருந்தாலும் சம்பளத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றும், படக்குழுவினரும் பணத்தை திருப்பி கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story