பிரபல தெலுங்கு நடிகரை அறைந்த கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் சர்காரு வாரி பாட்டா படப்பிடிப்பில் நடிகர் மகேஷ்பாபுவை தவறுதலாக அடித்துவிட்டு மன்னிப்பு கேட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழில் சாணி காகிதம், தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக சர்காரு வாரி பாட்டா, மலையாளத்தில் வாஷி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. மேலும் 4 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சர்காரு வாரி பாட்டா படப்பிடிப்பில் நடிகர் மகேஷ்பாபுவை தவறுதலாக அடித்துவிட்டு மன்னிப்பு கேட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “நான் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோது ஒரு நாள் தவறுதலாக மகேஷ்பாபு முகத்தில் அடித்துவிட்டேன். என்னை அறியாமல் இந்த தவறு நடந்துவிட்டது. மகேஷ்பாபுவை அடித்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் பெருந்தன்மையாக, ‘பரவாயில்லை. தெரியாமல் நடந்ததுதானே வருத்தப்பட வேண்டாம்’ என்றார். ஆனாலும் மனது கேட்கவில்லை. மகேஷ்பாபுவிடம் 3 முறை மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டேன். நான் தாக்கியதை சாதாரண விஷயமாக அவர் எடுத்துக்கொண்டது நிம்மதி அளித்தது’’ என்றார்.
Related Tags :
Next Story