திருப்பதி கோவிலில் திரிஷா சாமி தரிசனம்


திருப்பதி கோவிலில் திரிஷா சாமி தரிசனம்
x
தினத்தந்தி 5 May 2022 1:24 PM IST (Updated: 5 May 2022 1:24 PM IST)
t-max-icont-min-icon

நடிகை திரிஷா தனது பிறந்த நாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

கோவில் தேவஸ்தானம் சார்பில் திரிஷாவுக்கு ரங்கநாயகம் மண்டபத்தில் வைத்து தீர்த்த, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அவற்றை பயபக்தியுடன் பெற்றுக்கொண்டார்.

திரிஷாவுடன் அவரது தாயும் வந்து இருந்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த திரிஷாவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள முண்டியடித்தனர். எல்லோருடனும் திரிஷா பொறுமையாக நின்று செல்பிக்கு போஸ் கொடுத்தார். சிலர் கைகுலுக்கவும் செய்தனர்.

1999-ல் சென்னை அழகி பட்டத்தை வென்று நடிக்க வந்த திரிஷா 22 ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது அவருக்கு 39 வயது ஆன நிலையிலும் கதாநாயகி வாய்ப்புகள் குறையவில்லை.

ஏற்கனவே பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்த திரிஷா இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடிக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள பொன்னியின் செல்வன் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. தற்போது தி ரோட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Next Story