ஓ.டி.டி.யில் வரும் நயன்தாராவின் 3-வது படம்


ஓ.டி.டி.யில் வரும் நயன்தாராவின் 3-வது படம்
x
தினத்தந்தி 9 May 2022 2:56 PM IST (Updated: 9 May 2022 2:57 PM IST)
t-max-icont-min-icon

நயன்தாரா நடித்துள்ள ’02’ என்ற படமும் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் ஆகிய இரண்டு படங்கள் ஏற்கனவே தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டன. மூக்குத்தி அம்மன் பக்தி படமாக வந்தது. இதில் நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். நெற்றிக்கண் படத்தில் பார்வை இழந்தவராக வந்தார். இந்த நிலையில் 3-வதாக நயன்தாரா நடித்துள்ள ’02’ என்ற படமும் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

புதிய படங்களை ஓ.டி.டி.யில் நேரடியாக வெளியிட தியேட்டர் அதிபர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவின் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியானது. மலையாளத்தில் பிருதிவிராஜுடன் கோல்டு படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட்பாதர் படத்தில் நடிக்கிறார். இது மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகிறது. இந்தியில் ஷாருக்கானுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். கனெக்ட் என்ற தமிழ் படமும் கைவசம் உள்ளது.


Next Story